Pages

Friday, January 6, 2012

நதியில் தவறிய துளி - 7

தொடர்ச்சி...

எல்லா
காதல் காரர்களையும் போல
நானும்


ஏதோவொரு
தனிப் பாதையில்
தவறி விழுந்து
தூக்கிவிட ஆளில்லாமல்
தானே எழுந்து அழுதுவரும் 
குழந்தையைப் போல 
வாழ்க்கையை நோக்கிப் போகிறேன்


ஆனால்
எதோ கவனத்தில்
எல்லோர் எதிரிலும் விழுந்துவிட்ட
இளைஞனைப் போல
வாழ்க்கை என்னிடம்
கூச்சத்தோடு விலகிப் போகிறது


இந்தச் சமூகத்தில்
சராசரி கனவுகளுக்கு
கிடைக்கும் அங்கீகாரம்
வித்தியாசமான
நிஜங்களுக்குக் கிடைப்பதில்லை


ஒரு வேலை
நான் தவறா...


இல்லை
நிச்சயம் இல்லை


ரோஜாச்செடியில் 
மல்லிகைப் பூத்தால்
சமூகம் அஞ்சும்
நான் ஆர்ப்பரிப்பேன்


ஏனெனில்
எனக்கு
இந்த அன்றாடங்கள் பிடிக்கவில்லை
ஒரே மாதிரியான இயக்கம் கொண்டிருக்க
நான் இயந்திரமில்லை


என்னை விலக்கி, விலகி 
போகும் சமூகம் 
என்னை கூவமாக கருதுமின்
அவர்களுக்கு குமட்டுவதால்
இந்தக் கூவம் புனிதமாகிவிடமுடியாது


கங்கையாக கருதுமின்
அவர்கள் வணங்குவதால்
இந்த கங்கை 
இன்னும் சிறந்துவிடமுடியாது


எனக்கும்
கட்டுகளுண்டு


கூட்டைவிட்டுப் பறந்தாலும்
எந்த பறவையும்
வானுக்கு வெளியே
சென்றுவிடமுடியாது


ஆனால்
என்னை
கட்டியிருப்பவை
பூச்சங்கிளிகளாய் இருக்குமாறு
பார்த்துக் கொள்கிறேன்


அதற்கான
பூக்களை நான்
காதலிலிருந்து
பறித்துவருகிறேன்.


நட்ச்சத்திரா 
நீதான் என்னென்ன 
மாற்றங்களை
நிகழ்த்திவிட்டாய்...


உண்மைதான்


அவள்தான்
அடிக்கடி
கண்களைக் கட்டி
என்னை ஒரு பிருந்தாவனத்தில்
கொண்டு அவிழ்த்துவிடுகிறாள்


அவள் கொடுக்கும்
துயரங்களுக்கும் மகிழ்வுகளுக்கும்
பெரிய வித்த்யாசம் இருந்ததாக 
எனக்கு தோன்றியதில்லை


அவை 
ஒரு தாயின்
இரண்டுக் குழந்தைகளைப் போல...


( தொடர்வோம் )...












2 comments:

  1. கட்டும் சமூகத்தோடு தன்னைக் கட்டாமல் தனக்கென ஒரு கட்டுக்குள் வாழும் இந்தக் காதலன் துயர் சொல்லும் வரிகள் நெகிழ வைக்கின்றன் !

    ReplyDelete
  2. அவள் கொடுக்கும் துயரங்களும் மகிழ்வுகளும் ஒரு தாய்வயிற்றுக் குழந்தைகளெனும் சித்தரிப்பு வெகு அருமை. பாராட்டுகள். தொடருங்கள்.

    ReplyDelete