Pages

Monday, February 6, 2012

நதியில் தவறிய துளி - 14


தொடர்ச்சி ...


வேண்டாம் கண்ணே 
நீ உணர்த்த வேண்டாம் 
நீ கடனாளியுமல்ல

நீ உணர்த்தமுடியவில்லை 
என்று உணர்த்திய 
உன் உணர்வுகளுக்காகவே நான் 
நட்சத்திரங்களை விடவும்
ஒன்று கூடுதலாக கவிதை எழுதவேண்டும்

தாயின் மார்புகள்
கணத்திருப்பதை உணராமல் 
பாலருந்த மறுக்கும் குழந்தையைப் போல 
நான் உன்னை உணராமல்
என்னையே உணர்த்திக்கிடந்தேன்

நீ புத்தகம் என்பதுப் புரியாமல்
வெள்ளைத் தாளென
உன்னில் என்னைக் கிறுக்கிக் கிடந்தேன்

இனி அப்படியிருக்காது...

போதும்
நான் உங்களை வருத்திவிட்டேனா ?

இல்லையடி
ஆனால் திருத்தியிருக்கிறாய்
இனி
நீ பேசு
நான் கேட்டுக்கிடக்கிறேன்
நீ கேள் 
நான் சொல்லிக்கிடக்கிறேன்

அதிகம் வளர்ந்த 
நகத்தையும், நாணத்தையும் களைவது
வருத்துவதாகாது

உன் அன்பிற்கு 
அநேகமாய் நான் என்னையே கொடுத்தாலும்
அது பெரிதென இருக்காது

என்ன ?
அப்படியானால்
இதுவரை உங்களை எனக்கு
கொடுக்கவே இல்லையா...

கள்ளி .,

அதெல்லாம் இல்லை
சொல்லுங்கள்
உங்களை எனக்கு கொடுக்கவே இல்லையா ?

அவள் 
என் பதிலை யூகிக்கமுடியாதவள் அல்ல 
ஆனாலும்
நானாக சொல்லவேண்டுமென்று
கேட்டாள்...

அதற்க்கு நான் 

ஆம்
என்னை உனக்கு கொடுக்கவேயில்லை
என்றேன். ?!

( தொடரும் )...

3 comments:

  1. காதலில் கனக்கும் மன உணர்வுகளை இவ்வளவு அழகாய் வேதனை வெளிப்படும் வரிகளால் உணர்த்தவும் கூடுமோ? கூடியுள்ளதே இங்கு! பிரமாதம். எனக்கும் கனத்துப்போனது மனம். தொடரட்டும் காதல்!

    ReplyDelete
    Replies
    1. இந்த தொடர் எழுத நினைக்கையில் முழு மனமும் இயங்கவில்லை, ஆனால் தங்களின் வாசிப்பும், தங்களின் அறிமுகம் மூலம் கிடைத்த வாசிப்பும் மேலும் என்னை செலுத்திற்று, அன்பு நன்றிகள், தவிர நமது வெயில் நதி வரும் மே மாதத்திலிருந்து அச்சு இதழாக வரவிருக்கிறது , தங்களின் கவிதைகள் சிறுகதைகள் அனுப்பவும் வேண்டுகிறேன், விவரங்களுக்கு வெயில்நதி செய்தி இடுகையைப் பாருங்கள்...

      Delete
  2. கடைசியில் எனக்கும் ஏமாற்றம்தான்.இன்னும் கொடுக்கவில்லையா என்று.தொடருங்கள்.நிச்சயம் ஏமாற்றமாட்டீர்கள் காதலை !

    ReplyDelete