Pages

Sunday, February 19, 2012

நதியில் தவறிய துளி - 16

தொடர்ச்சி ...
கனவுகளும் நினைவுகளும் பெரும்பாலும்
வாழ்வின் எதார்த்தங்களில் இருந்து 
வெகுவாய் விலகியே இருக்கின்றன

எப்போது நினைத்தாலும் 
அருகே அமர்ந்து தலைகோதுபவள்
எப்போது கண்கள் மூடினாலும்
எனது பாதைகளின் முட்களை வருடி
பூக்கள் செய்பவள்

நிஜத்தில்
தனது வண்ணங்களை சட்டை செய்யாத
வண்ணத்துப் பூச்சியைப்போல 
என் காதலை தீண்டத்தகாததாய் பாவித்தாள்

நான் அவளை
காதலித்துக்கொண்டேயிருந்தேன்
அவள் என்னை மறுத்துக்கொண்டேயிருந்தாள்
..........

ஆனால்
வெளிச்சங்கள் அவசியமில்லாத 
வித்தியாசமான நிழல் போல
அவளின் நினைவுகள் என்னை 
தொடர்ந்துக்கொண்டிருந்தன

ஒரு பூவின் தலைக்குமேலே பறந்து
உட்காராமல் சென்றுவிடும்
வண்ணத்துப்பூச்சியைப்போல
என் காதலை தெரிந்தும் 
அவள்
பேருந்தின் ஜன்னல் வழியே தெரியும்
சுவாரசியமான காட்சியைப்போல 
பார்த்தபடி சென்றாள் 

நான் காதலில் தொலைந்தது
அவள் தேடிக்கொள்வாள்
என்ற நம்பிக்கையில்தான்

எல்லோர் கால்களிலும் இடற
நான் என் கவிதைகளை தவறவிட்டது
அவளுக்கு கிடைத்துவிடும்
என்ற நம்பிக்கையில்தான்

ஒவ்வொரு முறையும் 
பரிகசிக்கப்படும் என் காதலை
இறந்த எறும்பை இழுத்துச்செல்லும் 
இன்னொரு எறும்பென பற்றிவருவது 
வாடிக்கையாயிருந்தது எனக்கு

நான் உணர்ந்த ஏகாந்தம் 
எனக்குள்ளிருந்தது காதல்
என்றறிந்த நாளோடு நின்றுவிட்டது

நானுணர்ந்த சுகம்
கவிதைகளைப் பூசிக்கொண்டு
தொடர்ந்துவருகிறது

அவள்தான் என்னை
தீச்சருகுகளில் மீட்டு 
பூக்களுக்குள் புதைத்தாள்

இனிமை முலாம் பூசியிருந்த 
என் வாழ்க்கையை
நிஜமாகவே இனிமையாக்கியது
அவள்தான் 

( தொடரும் )....




5 comments:

  1. ஒரு பூவின் தலைக்குமேலே பறந்து
    உட்காராமல் சென்றுவிடும்
    வண்ணத்துப்பூச்சியைப்போல

    நல்ல படிமம்.
    படிமங்கள் பரவியிருக்கிற துளி
    மனசை நனைக்கிறது.

    ReplyDelete
  2. ம்...தொடரட்டும் !

    ReplyDelete
  3. //அவள்தான் என்னை
    தீச்சருகுகளில் மீட்டு
    பூக்களுக்குள் புதைத்தாள்

    இனிமை முலாம் பூசியிருந்த
    என் வாழ்க்கையை
    நிஜமாகவே இனிமையாக்கியது
    அவள்தான்.///

    அருமையான கவித்துவமான படிவங்கள்.தொடர்க வாழ்த்துக்கள்...!.

    ReplyDelete
  4. நான் உணர்ந்த ஏகாந்தம்
    எனக்குள்ளிருந்தது காதல்
    என்றறிந்த நாளோடு நின்றுவிட்டது நல்ல படைப்பு .. தொடர்ந்து தாருங்கள்
    எஸ்.மதி

    ReplyDelete
  5. // அவள்தான் என்னை
    தீச்சருகுகளில் மீட்டு
    பூக்களுக்குள் புதைத்தாள்

    இனிமை முலாம் பூசியிருந்த
    என் வாழ்க்கையை
    நிஜமாகவே இனிமையாக்கியது
    அவள்தான் // அருமை

    ReplyDelete