Pages

Monday, January 9, 2012

நதியில் தவறிய துளி - 8

தொடர்ச்சி...

பயணத்தின்
ஜன்னலோரக் காட்சிகளாய் மட்டுமே 
என்னால் அவளை
நினைவு கூற முடிகிறது


கனவுகளில் 
எனை
ஆரத்தழுவிக்கொள்கிறவள்


நிஜங்களில்
தூரத்தில்
அழைத்துக்கொண்டேயிருக்கும் 
வானத்தின் குழந்தையைப்போல
இருந்தாள்


அப்படி 
ஒரு கனவில்...


அந்தக்கனவை நான் 
எப்படியுனர்த்த ?


இருந்தாலும்
முடிந்தவரைச் சொல்கிறேன்...


மேகத்தின் தூறல்கள்
ஒவ்வொன்றும்
வேர்களாகவும் 
பூமியின் பூங்காக்கள்
ஒவ்வொன்றும் மழையாகவும்


அதாவது
மழையை நோக்கி
வேர் பொழிந்தது போலான
அந்த
மயக்கம் மிகுந்த கனவை
நான் மறந்திருந்தால்


அதுவரை நான் 
நியாபகங்கள் பற்றி
தெரிந்திருக்கவில்லை என்றுதான் அர்த்தம்


அந்த
மகரந்தம் மிகுந்த நாளில்...
முதன் முதலாக
அவளுக்கு நான்
பூ கொண்டு போனேன் 


எனக்கு
பூவைப்போன்ற பரிசு
பெரிது வேறில்லை
அவளுக்கு பூவென்பது
பெரிதாய் ஒன்றுமில்லை


இருந்தாலும் 
பூ கொண்டு போனேன்...


( தொடரும் )...





2 comments:

  1. பூவைப் பற்றியதா பூவை? கனவில் ஒரு கனவில்(கனவு இல்). அருமை. அருமை. தொடரட்டும் காதல் பூபாளம்(பூ பாலம்).

    ReplyDelete
  2. கனவில் மழைபெய்தால் அந்த உணர்வைச் சொன்ன விதம் அழகு.பூவை அலட்சியம் செய்யும் பூவையா!

    ReplyDelete