Pages

Sunday, January 15, 2012

நதியில் தவறிய துளி - 10


ஏன் இப்படி

பார்க்கிறீர்கள் 

எப்படி

தொலைத்த பொருளை
தேடும் சிறுவனைப் போல

அடி உயிரே 
விடையையும்
நீயே கூறிவிட்டாய்

அப்படியென்றால் நீங்கள்...

உண்மைதான்

உன் விழிகளில்
என் பார்வையை 
உனது துடிப்பில் 
என் இதயத்தை 
உன் சுவாசத்தில்
எனது நுரையீரலை

இப்படியாய்
உன் ஒவ்வொன்றிலும்
என் ஒவ்வொன்றாய் தொலைந்துப்போனது

அவைகளுள்
ஒன்றிரண்டேனும்
அடைந்துவிடும் பொருட்டே 
உன்னில் தேடிக்கொண்டிருக்கிறேன்

போதும் போதும்
எனக்கு
என்னென்னவோ ஆகிறது

அப்படியானால் 
என்னை நானில்லாமல்
செய்துவிட்டாயே 
அதற்கென்ன சொல்வது

யார்
நானா
உங்களை...

மன்னித்துவிடு
நீயென்று குறிப்பாக
சொல்லமுடியாது

ம்...
அப்படியானால்...

ஆம்
உன் விழிகள்
என்னைக் கொன்றது
தீண்டல்
உயிர்த்தெழச் செய்தது 
இப்படியாக...

அப்பப்பா
என்னவொரு
கற்பனாவாதி

இல்லையில்லை
நான் உன் வாதி

புரியவில்லையே

எனக்கு
கனவுகளென்றும் 
கற்பனைகள் என்றும்
உனையன்றி வேறில்லை

அதனால்
நான் உன் வாதி

எங்களின் உரையாடலில்
இந்த இடத்தில்
மௌனம்
பேசத்துவங்கியது...

இந்த மௌனம் இருகிறதே
இதுதான்
பேசாமல் அதிகம் பேசுகிற மொழி

போருக்கு போய்வருகிறேன்
எனும் வீரனிடம்
மனைவியின் மௌனம் 
அவஸ்த்தை,

( தொடரும் )...


2 comments:

  1. பேசத்தொடங்கிவிட்டாள் உங்கள் காதலி.இனி நீங்கள் பேசமாட்டீர்கள் !

    ReplyDelete
  2. ம்... ம்...

    ம் என்ற சொல் அவளுடையதெனில் ஓராயிரம் கவி படைக்கலாமே..

    இங்கே அவள் வாய் மொழிந்தபின் எல்லாமும்...ம்..ம்.. சுகமோ சுகம்..ம்...ம்.

    ReplyDelete