Pages

Tuesday, January 3, 2012

நதியில் தவறிய துளி - 5


தொடர்ச்சி...

நட்சத்திரா 
என்னை
அனைத்துக் கொள்வாயா
என்றேன்..
Roses of my heart


அவளுள் 
எதோ  நிகழ்ந்திருப்பதை
அவளின் ஸ்பரிசம் உணர்த்திற்று

ஆம் 
என்னை அணைத்துக்கொண்டாள் 

அது போலவே 
அவளின்
கண்களையும்
பார்வையையும்
அவளின் துப்பட்டா
அனைத்துக்கொண்டிருந்தது

நான்
பிறந்ததிலிருந்து 
அதுவரை
செத்துக்கொண்டே
வாழ்ந்ததுமில்லை
வாழ்ந்துக்கொண்டே
செத்ததுமில்லை

அப்படியே இருந்திருந்தாலும்
அந்நிலையில்
வாகனமியக்கியதுமில்லை 

ஒரு ஏகாந்த சூழலில் 
எதுவென்று தெரியாத
இலக்கு வந்துக் கொண்டிருப்பதோ
தனிமையின்
இருட்டுக் காலை
போய்க்கொண்டிருப்பதோ
எங்கனம் உணருவது நான்...

என்னவென்று சொல்ல

எனக்குப் புரியவில்லை
தூங்கும் போதா 
சிரிக்கும் போதா 
பேசும்போது,
மௌனத்தின் போதா.....

எதுதான் அவளது 
நிஜமான அழகு?

ஆனால்
இப்போது
வெட்கப்படும்போதுதான்
அழகென்றுத் தோன்றியது...

மரத்தின் சதை துளைத்து
உலகை அடைந்த
தளிர் போல
என் நெஞ்சின் 
சதை துளைத்து
காதலை அடைந்தவள்

எப்படிச் சிவக்கிறாள்
அடடா...

சூரியன்
வந்துக்கொண்டிருந்தது...

எங்களை
வரவேற்கவா
துரத்தவா...
புரியவில்லை.

இத்தனைக் கலவரங்கள்
ஏதும் புரியாமல்

சாத்தானின்
முடிவு தெரியுமுன்பே
தூங்கிவிடும்
குழந்தையைப்போல 
அவள் தூங்கிவிட்டிருந்தாள்

என்பதை
நான்

ஒருமையில்
பல வார்த்தைகள்
பேசிக்கொண்டிருந்தபோதுதான்
உணர்ந்தேன்...

அவள்
எனது தோளில்
தலை சாய்த்திருந்தாள்

என் தோள்கள்
பூக்குவியல்களால்
ஆனதில்லையே
என்று

முதன் முதலாக 
வருந்தினேன்

( தொடரும் )...

3 comments:

  1. காதலியைத் தூங்கவைக்க உங்கள் தோளைப் பூக்குவியல்களாக்கும் திட்டம் அழகு.கொடுத்தவைத்தவர் உங்கள் காதலி !

    ReplyDelete
  2. மரத்தின் சதை துளைத்து உலகை அடைந்த தளிர் - வர்ணிக்கும் வார்த்தைகளில் மனம் சொக்குகிறது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் திண்டாடச்செய்யும் காதல் அவஸ்தையும் சுகம், பூக்குவியலொன்று தோள் தொட்டு, தீ மூட்டும்போது.

    ReplyDelete
  3. ஹேமா
    கீதா...
    உங்கள் தொடர்தல் நான் கவனமாய் இயங்கவேண்டிய
    அவசியத்தையும் உணர்த்துகிறது,
    மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete