தொடர்ச்சி...
ஆனால் அவள் வாங்கவில்லை
விருந்தினர்
கொடுக்கும் பரிசை
வாங்க மறுக்கும்
குழந்தையைப்போல் அவள்
தயங்கினாள்
எனக்குமுன்
வாடத் துவங்கியது
பூ
அப்போதுதான்
அந்த அற்புதம் நிகழ்ந்தது
ஆம்
அவள்
முகம் திருப்பி
கூந்தல் காட்டி நின்றாள்
என்னயிது
நிலவை மறைத்து
மேகம் போல...
இல்லையில்லை
நான் புரிந்துக்கொண்டேன்
எனக்குள்ளே மழை பெய்து
நான்
நனைந்தும் கொண்டேன்...
ஆம்
அதற்கு அர்த்தம்
நான்
சூட்டிவிட வேண்டுமென்பது !
பிறகென்ன
நானும்
அந்த அதிசயம் நிகழ்த்தினேன்
பூவுக்கு பூவைச் சூட்டினேன்
இப்போது
அந்த பூ
வாசம் கூடியிருந்தது
அவள் பணித்துளிச் சுமந்த
புல்லைப்போல
குனிந்திருந்தாள்
குனிந்தேயிருந்தாள்...
இனியும்
முடியாதென
நான் குனிந்தேன்
அவள்
நுனி பாரம் குறைந்த
புல்லைப்போல
நிமிர்ந்துக்கொண்டாள்
கொஞ்ச நேரம்
நிமிர்ந்தும்
குனிந்தும் கிடந்தோம்
ஆனால்
வெகு சீக்கிரமே
ஒரு தருணத்தில்
எதிரெதிர் எறும்புகளைப்போல
ஒரே நேரத்தில்
பார்த்துக்கொண்டோம்
பார்த்தல்
துவங்கியது இப்போது
அவளின் விழிகள்
மழையாகவும்
எனது விழிகள்
பள்ளத்தாக்கைப்போலவும்
மாறியிருந்தன
அவளே முதலில்
இமைத்தாள்
எனினும்
கொஞ்சநேரம் நான்
இமைக்காமலேயே இருந்தேன்
( தொடரும் )...
காதல் மழை தொடர்ந்து பொழியட்டும். நனைந்தபடிக் காத்திருக்கிறேன் நானும்.
ReplyDeleteகாதல் இது காதல்.பூவின் பாரம்கூடத் தாங்காத போவொன்று !
ReplyDelete