தொடர்ச்சி...
இல்லை
என்னையுனக்கு கொடுக்கவேயில்லை
....
நான் உனக்கானவன்
உனக்கான ஒன்றை
உனக்கே கொடுப்பதெப்படி ?
.....
மௌனம்...
பிறகு
அவளே அவளின் மௌனத்தில்
கல்லெறிந்தாள்
அது
நிலவின் மேல் மேகத்தை
பிய்த்து எரிந்ததைப் போல இருந்தது
என்னை
மன்னித்துவிடுங்கள்...
மன்னிக்கவா
எதற்கு ?
உங்களை புரியாமல்
எரிந்துக் கிடந்தேனே
மாடத்தின் மேல் அனல் துப்பும்
விளக்காய்
இருந்தேனே
அதற்க்கு.
அடி சகி.,
நீ கேட்டு இல்லையெனக்கூடாது
அதனால் மன்னிக்கிறேன்
ஆனால்
நீ வெறுப்பதர்க்கேனும்
புரிந்திருந்ததால்தான் அப்போது
நான் வாழ்ந்திருந்தேன்
..........
.........................
......
.................
இப்படியெல்லாம்
ஒரு ஏகாந்தம் என் நாட்களில்
நிகழவே கூடாதா
இது என்ன
என் காதலில் மட்டும்
இலையுதிர்க் காலத்திற்குப் பிறகு
வேருதிர்க்காலமா ???
என்றெல்லாம்
மருகினாலும்
இதுபோன்ற
கனவுகளும் நினைவுகளும்
எப்போதும் என்னில் குறையாமலேயே இருந்தது
மேகங்கள் கடக்கையில்
சருகுகள் அசைத்து சமிக்ஞை செய்யும்
இலையுதிக்கால மரம் போல
விலகிச்செல்லும்
அவளிடமிருந்து என் காதலின் பச்சயம் கெடாமல்
பார்த்துக்கொள்வது
இப்படியான கனவுகளும் நினைவுகளும்தான்
இன்னும் சொல்வதானால்
ஒரு பூஞ்செடியின் அடியில் வாழும்
எறும்பைப்போல
அவளின் நினைவுகளோடு
வாழ்ந்துக்கொண்டிருந்தேன்
பெரு மழையில்
மொட்டின் மீது மோதிச்சிலிர்க்கும் துளியைப்போல
மறுத்துச்செல்லும் அவளோடான
நியாபக வாழ்க்கையில்
சுகிக்க முடிகிறது என்னால்
நான் அழகாகிப்போனேன்
என்னுள்ளிருந்த பெண்மை உணர்ந்தேன்
மகிழ்வுக்கும் எனக்குமான தூரம் குறைந்தது
......
இன்னும் இன்னும்....
ஆனால்
என்னை அவளுக்கு உணர்த்துவதிலேயே
என் காதலின் ஈரமெல்லாம்
தீர்ந்துப்போகுமோ என்றும்
ஆழ்ந்திருந்தேன் ....
( தொடரும் )...
இல்லை
என்னையுனக்கு கொடுக்கவேயில்லை
....
நான் உனக்கானவன்
உனக்கான ஒன்றை
உனக்கே கொடுப்பதெப்படி ?
.....
மௌனம்...
பிறகு
அவளே அவளின் மௌனத்தில்
கல்லெறிந்தாள்
அது
நிலவின் மேல் மேகத்தை
பிய்த்து எரிந்ததைப் போல இருந்தது
என்னை
மன்னித்துவிடுங்கள்...
மன்னிக்கவா
எதற்கு ?
உங்களை புரியாமல்
எரிந்துக் கிடந்தேனே
மாடத்தின் மேல் அனல் துப்பும்
விளக்காய்
இருந்தேனே
அதற்க்கு.
அடி சகி.,
நீ கேட்டு இல்லையெனக்கூடாது
அதனால் மன்னிக்கிறேன்
ஆனால்
நீ வெறுப்பதர்க்கேனும்
புரிந்திருந்ததால்தான் அப்போது
நான் வாழ்ந்திருந்தேன்
..........
.........................
......
.................
இப்படியெல்லாம்
ஒரு ஏகாந்தம் என் நாட்களில்
நிகழவே கூடாதா
இது என்ன
என் காதலில் மட்டும்
இலையுதிர்க் காலத்திற்குப் பிறகு
வேருதிர்க்காலமா ???
என்றெல்லாம்
மருகினாலும்
இதுபோன்ற
கனவுகளும் நினைவுகளும்
எப்போதும் என்னில் குறையாமலேயே இருந்தது
மேகங்கள் கடக்கையில்
சருகுகள் அசைத்து சமிக்ஞை செய்யும்
இலையுதிக்கால மரம் போல
விலகிச்செல்லும்
அவளிடமிருந்து என் காதலின் பச்சயம் கெடாமல்
பார்த்துக்கொள்வது
இப்படியான கனவுகளும் நினைவுகளும்தான்
இன்னும் சொல்வதானால்
ஒரு பூஞ்செடியின் அடியில் வாழும்
எறும்பைப்போல
அவளின் நினைவுகளோடு
வாழ்ந்துக்கொண்டிருந்தேன்
பெரு மழையில்
மொட்டின் மீது மோதிச்சிலிர்க்கும் துளியைப்போல
மறுத்துச்செல்லும் அவளோடான
நியாபக வாழ்க்கையில்
சுகிக்க முடிகிறது என்னால்
நான் அழகாகிப்போனேன்
என்னுள்ளிருந்த பெண்மை உணர்ந்தேன்
மகிழ்வுக்கும் எனக்குமான தூரம் குறைந்தது
......
இன்னும் இன்னும்....
ஆனால்
என்னை அவளுக்கு உணர்த்துவதிலேயே
என் காதலின் ஈரமெல்லாம்
தீர்ந்துப்போகுமோ என்றும்
ஆழ்ந்திருந்தேன் ....
( தொடரும் )...
அழகான தமிழ் குழைத்துத் தரும் காதல் தொடரட்டும்.காதல் வாழ்த்துகள் !
ReplyDeleteஒன்றன்மீது ஒன்றாய் அடுக்கிக் கட்டிய மல்லிகைச்சரம் போல் வாசிக்க வாசிக்க வியப்பூட்டும் உவமைகளும், சொல்வண்ணமும் பிரமாதம். கனிந்துகிடக்கிறது கவிதைப்பழமொன்று. விலக விரும்பாது மொய்க்கும் ஈயாய் என்மனம். பாராட்டுகள்.
ReplyDelete